• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

Byமதி

Nov 25, 2021

தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிவப்பு வண்ண எச்சரிக்கையும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

கனமழை தொடர்பான இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 12 மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர், ராமநாதபுரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும்; திருநெல்வேலி, தென்காசி, பெரம்பலூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.