• Mon. Mar 17th, 2025

திருமங்கலத்தில் மாணவர்கள் பல்வேறு இடங்களில் தூய்மைப்பணி விழிப்புணர்வு..!

Byவிஷா

Oct 2, 2023

திருமங்கலத்தில் பல்வேறு இடங்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ் மாணவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர்
திருமங்கலம் ஸ்டேஷன் பத்திரகாளி மாரியம்மன் கோவில் பகுதிகளில் பி. கே.என். கலைக் கல்லூரி என். எஸ். எஸ். , என். சி. சி. மாணவர்கள், தூய்மை பணி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெயசீலன் செயலாளர் செல்வராஜ், முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கப்பலூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். தலைமை டாக்டர் ராம்குமார், ஊராட்சி தலைவர் கண்ணன், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமார் கலந்து கொண்டனர். திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் நகர் பா. ஜ. , வினர் நகர தலைவர் விஜயேந்திரன் தலைமையில், பார்வையாளர் ரவீந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சின்னச்சாமி தமிழ்மணி இணைந்து தூய்மை பணிமேற்காண்டனர்.