

மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100வது ஆண்டு விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் காமராசர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 99வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் டாக்டர் என். ஜெகதீசன் தலைமையில் சனிக்கிழமை வர்த்தக சங்கத்தின் பவள விழா ஹட்சன் பேரவை அரங்கில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் 100வது ஆண்டான 2023-24ன் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக என். ஜெகதீசன், செயலாளராக எஸ். ஸ்ரீதர், பொருளாளராக ஏ. சுந்தரலிங்கம், துணைத்தலைவர்களாக ஜெ. செல்வம், பா. ரமேஷ் மற்றும் டி. எஸ். ஜீயர் பாபு, இணைச் செயலாளர்களாக எம். ஏ. ராஜீவ், ஜி. கணேசன் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல் 99வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்துடன் பதவிக்காலம் முடிவடைந்த செயற்குழு உறுப்பினர்கள் ஆர். அழகுராஜ், டி. தனுஷ்கோடி, ஜி. இளங்கோவன், ஜி. கணேசன் (பார்மா), பி. டி. ஜானகிராமன், டாக்டர் என். ஜெகதீசன், பி. கண்ணதாசன், பி. மகாலிங்கம், ஆர். பிரபாகரன், ஏ. புருஷோத்தமன், பா. ரமேஷ், பி. வி. ரமேஷ்பாபு, பா. சரவணபாலன், எஸ். ஸ்ரீதர், ஏ. சுந்தரலிங்கம் ஆகிய 15 பேரும் மீண்டும் ஏகமனதாக செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த 15 ஆண்டுகளாக டாக்டர் என். ஜெகதீசன் போட்டியின்றி, ஏகமனதாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

