• Tue. Feb 18th, 2025

தமிழகத்தில் பாஜக குமரி மற்றும் கோவை மாவட்டத்தில் சற்று பலம் பெற்று வந்த அமைப்பு

குமரியில் பாஜக இரண்டு மாவட்டங்களாக மாற்றி அமைத்த பின், தமிழகத்தில் பாஜக குமரி மற்றும் கோவை மாவட்டத்தில் சற்று பலம் பெற்று வந்த அமைப்பு அதனை உண்மை ஆக்குவது போல் 2021_ ஆண்டு நடைபெற்ற அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4_ங்கு இடங்களில் வெற்றி பெற்றது.

கோவையில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மற்றும் குமரியில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி என இரண்டு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

குமரி மாவட்டத்திற்கு பாஜக என்ற கட்சியை அறிமுகம் செய்து கட்சியை வளர்க்க தினம் தண்ணீர் ஊற்றி பராமரித்தவர். இன்றைய நாகர்கோவிலில் சட்டமன்ற பாஜக உறுப்பினரான முதியவர் எம்.ஆர். காந்தி, குமரி மாவட்டத்தில் விதை விதைத்தவர் எம்.ஆர். காந்தி என்றாலும், அறுவடை செய்தவர், பலன் பெற்றவர் பொன். இராதாகிருஷ்ணன். இரண்டு முறை மத்தியில் இணை அமைச்சர், இரண்டு முறை தமிழக பாஜக தலைவர், பாஜகவின் சட்டம், திட்டத்தில் அகவை 70_கடந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்ற சட்டத்தால், குமரியில் இனிவரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் இனி வேட்பாளர் வாய்ப்பு பொன்னாருக்கும், எம்.ஆர். காந்திக்கும் இல்லை என்ற நிலையில் இவர்கள் இருவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் என்ற மரியாதையுடன் கட்சியின் அகில இந்திய தலைமையும், மாநில தலைமையும், இவர்கள் இருவரிடம் சில கட்சியின் பொது விசயங்களில் ஆலோசனைகள் கேட்கலாம் என பாஜகவின் இளைஞர்கள் சிலர் தெரிவித்தார்கள்.

இதுவரை குமரி மாவட்டம் பாஜகவின் ஒற்றை மாவட்டமாக திகழ்ந்து, இப்போது இரண்டு நிர்வாக மாவட்டமாக தமிழக தலைமை மாற்றிய பின், பழைய தலைவருடன், புதியவர் ஒருவரை அமைக்க குமரி பாஜகவில் நடந்த முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொருவர் பெயரை சொல்லி சொல்லி கருத்து தெரிவித்து களத்தில் பல்வேறு முயற்சிகள் நடந்தாலும், பாஜகவின் வரலாற்றில் அகில இந்திய தலைவர்,மாநில தலைவர், மாவட்ட தலைவர்கள் தேர்தல் நடத்தி தேர்வு செய்வதில்லை!?. தலைவர் பதவி மேல் இடத்தில் இருந்து ஒரு அறிக்கை மூலமே தலைவர் நியமனம் நடைபெறுவது பாஜகவில் வாடிக்கை.

குமரியில் பாஜகவின் நிர்வாக மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டபின், குமரி கிழக்கு மாவட்ட பாஜகவின் தலைவராக இன்று (ஜனவரி_19)யில் நியமனம் செய்யப்பட்டுள்ள கோப குமார். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வரிசையில் ஒருவர் கட்சியினரிடம் அனுசரித்து செல்பவர் என்ற புகழை முன்பே பெற்றவர். இயல்பாக மாற்று கட்சியினருக்கும் மரியாதை கொடுத்து அணுகுபவர் என்ற கருத்து பாஜகவினர் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.

இன்று மேற்கு மாவட்ட தலைவராக நியமிக்கபட்டுள்ள ஆர்.ற்றி.சுரேஷ் மேற்கு மாவட்டத்தில் பெற்றிருக்கும் நிலை கிழக்கு மாவட்டத்தில் இவருக்கு இல்லை.

குமரி மாவட்டத்தில் உள்ள 6_சட்டமன்ற தொகுதிகளிலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் பாஜகவை விட காங்கிரஸ் தான் அதிக வாக்குகள் வாங்கி பாஜகவை முழுமையாக தோல்வி அடைய செய்ததின் சான்று. பொன். இராதாகிருஷ்ணன் இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கிட்டத்தட்ட 75,000 வாக்குகளை குறைவாக பெற்றிருந்தது. பாஜகவின் காரியகர்த்தாக்கர் பலர் நடந்து முடிந்த தேர்தலில் களத்திற்கு வந்து “தாமரை” க்கு வாக்கு சேகரிக்கவில்லை. தேர்தல் செலவிற்கு வந்த பணம் மொத்த, மொத்தமாக எங்கோ?போய் பதுக்கப்பட்டு கட்சியின் வாக்குகள் குறைவதற்கு காரணம் என்ற பொது கருத்தே இன்று வரை குமரியில் பாஜகவின் ரின் ஒற்றை, ஒருங்கிணைந்த குரலாக இன்றும் ஒலித்துக்கொண்டே இருப்பதை பொதுவெளியில் கேட்க முடிகிறது.

அந்த அசட்டு தைரியத்தில் கடலில் நீந்த முயற்சிப்பது போன்ற நிலையில், குமரி கிழக்கு, மேற்கு மாவட்டத்தின் பாஜக தலைவர்கள் முன் இருக்கும் மிகப் பெரிய சவாலாக உள்ளது. குளத்தில் நீந்தி வெற்றி பெற்றவர்கள்.