நாகர்கோவிலில் ஆம்னி பேருந்தை மது போதையில் ஓட்டிவந்த ஓட்டுநரின் உரிமம் ரத்து.., ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறை…
கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து பறிமுதல் – ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இ கா ப., அவர்கள் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் இகப அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் வடசேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் துணை ஓட்டுநர்களை தணிக்கை செய்தபோது தனியார் பேருந்து ஒன்றை ஓட்டிவந்த சித்திரங்கோட்டைச் சேர்ந்த ஓட்டுநர் பிரபோத் குமார் என்பவர் குடிபோதையில் பேருந்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. அந்த வாகன ஓட்டுநர் மீது குடி போதை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் மேற்படி வாகன ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினரால் பரிந்துரை செய்யப்படும்.