• Fri. Mar 24th, 2023

மதுரையில் தமிழ் பேசும் குறவர்களுக்கு நிலப்பட்டா வழங்கக் கோரி போராட்டம்..!

Byவிஷா

Mar 15, 2023

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் பேசும் குறவர் இன மக்களுக்கு நிலப்பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் கல்மேடு பகுதியில நூற்றுக்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள்வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் ஊசி மணி, பாசிமணி, நரி பல் போன்றவற்றை விற்பனை செய்து வரும், வக்ரி மொழி பேசும் நரிக்குறவர்கள் அல்லது. மாறாக, குருவிக்காரர் என்று அழைக்கப்பட கூடியஇவர்கள், தமிழ் பேசக்கூடிய குறிஞ்சி நிலகுறவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்த இடமோ,வீடோ இல்லாத நிலையில்,சாணை பிடித்தல், கேஸ் அடுப்பு சர்வீஸ் செய்தல் போன்ற தொழிலை செய்து வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த மக்களுக்கு இலவச இடப்பட்டா வழங்க வேண்டி குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் விடுதலை நேசன் சார்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் எதிரே உள்ள தபால் தந்தி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர், “வேண்டும் வேண்டும் இலவச இடப்பட்டா வேண்டும்”என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *