• Fri. Jun 9th, 2023

மதுரையில் பெண்ணிடம் அத்துமீறிய நபரால் பரபரப்பு

ByKalamegam Viswanathan

Apr 12, 2023

மதுரை தனியார் பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபரால் பரபரப்பு – சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.!!
மதுரை மாநகரில் பல்வேறு தடங்களில் தனியார் பேருந்து பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றது.மதுரை புறநகர் பகுதியில் கிராமப்புறங்களிலிருந்து மதுரை நகருக்கு வேலைக்காக வந்து செல்லும் பெண்களுக்கு தனியார் மினி பேருந்தை பெரும் பயன் அளித்து வருகின்றது.இந்நிலையில் சக்கிமங்கலத்திலிருந்து தெப்பக்குளம் வரை செல்லும் தனியார் சிற்றுந்து ஒன்றில் பெண்ணிடம் அத்துமீறிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த பேருந்தில் பாண்டிகோவில் நிறுத்தம் அருகே காக்கி சட்டை மற்றும் கைலியுடன் ஏறிய நபர் ஒருவர் குடிபோதையில் பேருந்து ஓட்டுநரிடமும், நடத்துநரிடமும் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே வருகிறார்.
இதற்கிடையே அருகிலிருந்த இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்திருக்க அவரருகே இந்த நபரும் அமர்ந்து கொண்டு, அவரிடம் அத்துமீறியுள்ளார்.அந்நபர் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராகப் பணி புரிந்து அங்கு பணிநீக்கம் செய்யப்பட்டு ஊதியம் வழங்கப்படவில்லை என்பதும்,அதற்காக தனது சக பணியாளரிடமும் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பதற்காக மோசமான வார்த்தைகளால் பேசியதோடு, இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடமும் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.அந்த நேரத்தில் பேருந்தில் பயணம் செய்த சக பயணி இதனை வீடியோ பதிவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.பெண்கள் நிறைய பேர் பயணித்த அப்பேருந்தில் குடிபோதையில் வந்த ஒரு நபரின் தகாத செயல், பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.காவல்துறை அக்குறிப்பிட்ட நபரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *