• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து…

ByKalamegam Viswanathan

Sep 23, 2023

மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வி.ஓ.சி. பாலத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என தொடர்ந்து பலமுறை விபத்தில் சிக்கி உயிர்பலிகள் மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று சீனிவாசன் என்பவர் பாலத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பாலத்தை கடக்க முயற்சி செய்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்களுக்கு சிறு சிறு காயங்களுடன் மற்றும் சாலையில் நின்று கொண்டிருந்த சீனிவாசன் என்பவர் மீதும் கார் மோதியது லேசான காயத்துடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.