• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

*தடுப்பூசி செலுத்திக் கொள்ளுவதில் முதலிடம் பெறும் அமெரிக்கா*

Byமதி

Sep 27, 2021 ,

அமெரிக்கா தான், உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்தநிலையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுவது.

அமெரிக்காவைப் பொறுத்த வரை மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 39,01,14,328 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதில் 21,34,56,787 பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 18,36,70,870 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தவிர குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக கண்டறியப்பட்டவர்களில் சுமார் 20 லட்சம் பேர் 3-வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.