

மதுரை அவனியாபுரத்தில் ஸ்டேஷனரி ஸ்டோர் பெண் உரிமையாளர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி ஒன்பது பவுன் தாலி செயின் பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரம் சந்தோசம் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராபின்சன் அருள்ராஜ். இவரது மனைவி ஞான சுதன் சிலி (வயது 38).. இவர் வீட்டின் அருகில் ஸ்டேசனரரி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் கணவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் ஞானசுதன்சிலி மட்டும் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த கடைக்கு வந்த மர்ம நபர் அவரிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து அவரது கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவினார். அவர் வேதனையால் அலறிக்கொணடிருந்த போது அவர் அணிந்திருந்த ஒன்பது பவுன் தாலி செயினை பறித்துச் சென்று ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஞான சுதன் சிலி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் கண்ணில் மிளகாய் பொடி தூவி செயின் பறித்த நபரை அவனியாபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.
