• Thu. Sep 19th, 2024

மதுரையில் 1380 பதின்ம வயதுப்பிரசவங்கள் குறித்து வழக்கு பதியாதவர்கள் மீது வழக்கு பதியப்படும் – மதுரை மாவட்ட SP பேட்டி.

ByKalamegam Viswanathan

Sep 13, 2023

மதுரையில் 3 இடங்களில் அதிநவீன வசதியுடன் தொடங்கப்பட்ட சோதனைசாவடி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

மதுரையில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையிலும்., பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தமிழக காவல்துறை அறிவுறுத்தலின்படி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை புறநகர் பகுதிகளில் அதிக அளவு நடைபெறும் வழிப்பறி., கொலை., கொள்ளை., கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் வாகன சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இன்று மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை., விரகனூர் மற்றும் கூத்தியார் குண்டு ஆகிய 3 முக்கிய இடங்களில் அதிக அளவு நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு புதிதாக அமைக்கப்பட்ட இன்று இரவு திறந்து வைத்தார். இந்த மூன்று இடங்களில் 24 மணி நேரம் சோலார் மின் வசதியுடன் 360 டிகிரி சுழலும் அதிநவீன கேமராக்களுடன் மொத்தம் 21 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இன்று முதல் கனிகாணிக்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசுகையில்.,

முன்பகை காரணமாக பழிக்கு பலியாக நடைபெறும் சம்பவங்கள் குறித்தும் அவர்களுடைய நடவடிக்கை குறித்தும் கண்காணித்து அவர்களிடம் ஏற்கனவே வாங்கிய (110-வழக்கு) ஒப்புதல் மூலம் மீண்டும் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டால் அவர்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் ஆஜர் படுத்தி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறோம்.

குற்றவாளிகள் உள்ளூரிலோ அல்லது வெளியூரிலோ இருந்தால் அவளுடன் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. உசிலம்பட்டி., நாகமலை புதுக்கோட்டை., ஆஸ்டின் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளின் குறித்து வழக்கு போடாதது ஏன் தொடர்பாக ஆர்டிஓ மற்றும் ஏ டி எஸ் பி குழு நியமித்து எத்தனை வழக்குகள் போட்டு உள்ளார்கள் வழக்கு போடாதது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு போடாத நபர்கள் மீது வழக்கு கண்டிப்பாக பதியப்படும்.

நேரடியாகவே செல்போன் மூலம் கண்காணிப்பு கேமராக்களை பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு எங்கெங்கு கேமராக்கள் பயனில்லாமல் உள்ளதோ அதை உடனடியாக சரி செய்வதற்கான ஏற்பாடுகளும் செல்போன் செயலி மூலம் கண்டறிந்து அவற்றை சரி செய்யப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *