• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

இம்ரான் கான் பேரணியில் திடீர் தூப்பாக்கி சூடு.. பாகிஸ்தானில் பதட்டம்

ByA.Tamilselvan

Nov 3, 2022

அரசு எதிராக இம்ரான்கான் நடத்திய பேரணியில் தூப்பாக்க சூடு நடத்தப்பட்டதில் இம்ரான்கான் காயமடைந்துள்ளார்.இதனால் பாகிஸ்தானில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின்போது இம்ரான் கான் திறந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சபராலி கான் சவுக் என்ற இடத்தில் பேரணி சென்றபோது அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கானின் காலில் காயம் ஏற்பட்டது. . துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இம்ரான் கான் பாதுகாப்பாக குண்டு துளைக்காத வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.