நற்றிணைப் பாடல் 123:
உரையாய் வாழி தோழி இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கி
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே
பாடியவர்: காஞ்சிப் புலவனார்
திணை: நெய்தல்
பொருள்:
பூவும் தழையும் பறித்துத் தழையாடை புனைந்து உடுத்திக்கொண்டு, மணல்வீடு கட்டி விளையாடும்போது, மணல் வீட்டில் ஓடும் நண்டுகளைப் பார்த்து மகிழ்வாயே. இப்போது ஏதோ நினைத்துக்கொண்டு கவலைப்படுகிறாயே. கவலை வேண்டாம். அவர் வந்துவிடுவார், என்று தோழி, தலைவன் வருகையைத் தலைவிக்குத் தெரிவிக்கிறாள். குருகுப் பறவைக் கூட்டம் பனைமரத்துக் கூட்டில் இருந்துகொண்டு நள்ளிருளில் ஒலி எழுப்பும் கானல் இது. உப்பங்கழியில் வயிறார இரை உண்ட குருகுகள் அவை. வரிசையாகப் பறந்து செல்லும் குருகுகள் அவை. பனைமரத்து மடலில் அவை கூடு (குடம்பை) கட்டி வாழும்.
அந்தக் கானல் நிலத்தில் காலை வேளையில் பூக்களைப் பறித்து அணிந்துகொண்டு சிற்றில் இழைத்து, தோழிமாரோடு விளையாடுவாய். கடல் அலையில் ஓடி விளையாடுவாய். சேற்று (சேர்ப்பு) வளையிலிருந்து ஓடிவரும் நண்டைப் பார்த்துக்கொண்டிருப்பாய். இவையெல்லாம் உன் சிறுவிளையாடல்கள். இப்போதெல்லாம் அந்தச் சிறுவிளையாடல்கள் அழுங்கிவிட்டன (நின்றுவிட்டன).
உனக்கு நோய். நினைவு நோய். குறு நோய். அது உனக்குத் துயரம் தருகிறது. அவர் வந்துவிடுவார். துயரம் தீர்ந்துவிடும். தேன்மணம் கமழும் காவிப் பூக்களைப் பறிப்பாய். காவிப் பூ (காவி நிறச் செவ்வாம்பல்) நீரில் பூக்கும். அதற்குப் பகையாய் நிலத்தில் இருக்கும் தழைகளைப் பறிப்பாய். இரண்டையும் இணைத்துத் தழையாடை புனைந்து உடுத்திக்கொள்வாய். மணல் கரை கட்டிச் சிற்றில் இழைப்பாய். நண்டு அதில் பரிந்து ஓடும். அது கண்டல் மரத்தடியில் சேற்று வளையில் இருக்கும் நண்டு (அலவன்). அதனைப் பார்த்துக்கொண்டிருப்பாய்.
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]