• Sun. Apr 28th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Feb 27, 2024

நற்றிணைப்பாடல் 327:

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே – காதல்அம் தோழி!
அந் நிலை அல்லஆயினும், ‘சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர்’ என்று, உடன் அமர்ந்து உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே – போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே.

பாடியவர்: அம்மூவனார் திணை:நெய்தல்

பொருள்:

என்பால் அன்பு மிக்க தோழீ! நம்மை விரும்பிக் களவொழுக்கத்தில் வந்து முயங்கும் சான்றோராகிய தலைவரை நாம் விரும்பி ஒழுகுதல் பழியுடையதாமெனில்; தூங்காதனவாய் அழுகின்ற கண்ணோடு ஏக்கத்தால் இளைத்து இறந்து போதலும் இனியதாகும்; அவ்வாறு இறப்பது இயல்புடையதன்றாயினும்; சால்புடையவர் தாஞ்செய்யும் கடமையிலே குறைபடார் என்று; சேரப்பொருந்தி உலகம் கூறுவது உண்டெனக்கொண்டு; அரும்புகள் மலர்கின்ற புன்னைமர மோங்கிய சோலையையுடைய தண்ணிய துறைவரது மெத்தென்ற மார்பை; நிலையாகப் பெறத்தக்க தன்மையுடையே மானாலும் அஃது உரியதேயாகும்; இவ்விரண்டனுள் ஒன்றை அடைவது நலமாகுமன்றோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *