• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த இளையராஜா!

துபாயில் உள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு இசைஞானி இளையராஜாவின் விசிட் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது!

தமிழ் சினிமா ரசிகர்களை மனதை கவர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், துபாயில் நடைபெறும் ‘துபாய் எக்ஸ்போ 2020’ நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த இசைக்கச்சேரிக்கு பிறகு, துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்டமான ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜா சென்றார். அங்கு அவரை ஏ.ஆர். ரஹ்மான் வரவேற்று ஸ்டூடியோவை சுற்றிக் காண்பித்தார். பின்னர், இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படத்துக்கு கீழே, மேஸ்ட்ரோவை எங்களின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் ஏதேனும் இசை அமைப்பார் என நம்புகிறேன், என அவர் கூறியுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.