• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்; நன்றி சொன்ன செல்வராகவன்!

தன்னுடைய வாழ்த்தால் தனுஷ் குடும்பத்தை அன்பு மழையில் நனைத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர்.

பிரிவை அறிவித்த பிறகு, தனுஷ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாத்தி, அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மாளவிகாவுடன் தனுஷ் நடித்த மாறன் படம் மார்ச் 11ம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது. இதே போல் ஐஸ்வர்யாவும் முஷாஃபிர் என்ற மியூசிக் வீடியோவை 3 மொழிகளில் இயக்கி உள்ளார். இந்த வீடியோ மார்ச் 8 ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் தனது மச்சானும், டைரக்டருமான செல்வராகவன் மார்ச் 5ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, செல்வராகவனை கட்டிப்பிடித்தபடி இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்த ஐஸ்வர்யா அதோடு, ஹேப்பி பர்த் டே என்னுடைய குரு, ஃபிரண்ட், அப்பாவை போன்றவர், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என கேப்ஷனுடன் போஸ்ட் போட்டிருந்தார்.

தனுஷ் குடும்பத்தினர் மீது ஐஸ்வர்யா வைத்துள்ள இந்த மரியாதை மற்றும் பாசத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்!