மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுபமறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.
பாடியவர்: பேரெயின் முறுவலார்
திணை: குறிஞ்சி
பாடலின் பின்னணி:
தலைவன் தலைவியைப் பார்ப்பதற்காக வருகிறான். தலைவிக்குப் பதிலாக, அங்கே தோழி வந்திருக்கிறாள். தலைவி வரவில்லையா என்று தலைவன் தோழியைக் கேட்கிறான். ”உங்கள் காதல் தலைவியின் பெற்றோருக்குத் தெரிந்துவிட்டது. ஆகவே, தலைவி இனி உன்னைப் பார்க்க வரமாட்டாள்.” என்று தோழி கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவன், “காமம் முற்றினால் ஆண்கள் மடலேறத் துணிவார்கள்” என்று தான் மடலேற எண்ணியிருப்பதைத் தோழியிடம் கூறுகிறான்.
பாடலின் பொருள்:
காம நோயானது முதிர்வடைந்தால், பனை மட்டையையும் குதிரை எனக் கொண்டு, ஆடவர் அதனை ஊர்வர்; குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையை அணிந்து கொள்வர்; தெருவில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரித்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படமாட்டார்கள். தாம் எண்ணியது நிறைவேறாவிட்டால், வேறு செயல்களையும் செய்வர்.