
அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பாதியிலேயே கல்லூரி மாணவர்கள் வெளியேறினாலும், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.
மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகள் பலரும் முன்னதாக கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு முன்னெச்சரிக்கையாக விண்ணப்பித்து சேர்ந்துவிடுவர். அதன்பின்னர் அவர்களுக்கு சீட் கிடைத்ததும் கலை அறிவியல் கல்லூரியில் மாற்றுச்சான்றிதழை பெற்றுக்கொண்டுசென்றுவிடுவர்.இதேபோல் ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்கள், மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களும் முதலில் வேறு கல்லூரிகளில் சேர்ந்துவிடுவது சிலரது வழக்கம். ஆனால், அவர்களுக்கு கவுன்சிலிங்கில் சீட் கிடைத்ததும் மாற்றுச்சான்றிதழை கேட்கும்போது பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்க மறுக்கும். மாறாக அனைத்து செமஸ்டர்களுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்த வலியுறுத்தப்படுவர். இந்த பிரச்சனை பல காலமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறினாலும், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.
