தமிழக முழவதும் பள்ளிகளில் நாளை முதல் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தபட உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் இனி TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த முறை நாளை முதல் அமுலுக்கு வருகிறது. விடுப்பு ,தற்செயல் விடுப்பு,மருத்தவவிடுப்பு ,முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி இந்த செயலி வழியாகவே மேற்கொள்ளவேண்டும். இந்த செயலியில் மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோரது தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.