• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

`பாரத் மாதா கி ஜே’ சொல்லவில்லையென்றால் கட்டையால் அடியுங்கள் – பாஜக நிர்வாகி சர்ச்சை

கரௌலி, ஜோத்பூர் மற்றும் ராஜ்கர் கோயில் உடைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா ஆகியோர் தலைமையில், `ஜான் ஹங்கர்’ பேரணியை நடந்தது.

இந்த பேரணியில், முன்னாள் எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க நிர்வாகியுமான கியான் தேவ் அஹுஜா கலந்துகொண்டார்.

அப்போது பேசிய கியான் தேவ் அஹுஜா, “முஸ்லிம்கள் ஒருபோதும் இந்தியாவை ஆளவில்லை. முகலாயர்கள், ஆப்கானியர்களால்தான் இந்தியா ஆளப்பட்டது. உங்களுடைய அப்பாக்களும், தாத்தாக்களும் அடித்து, கட்டாயப்படுத்தி தான் முஸ்லிம்களாக மாற்றப்பட்டார்கள்.

இல்லையெனில் அவர்கள் இந்துக்கள்தான். இன்றைய முஸ்லிம்கள் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். எனவே முஸ்லிம்கள் ஓர் நாள் இந்துக்களாக மாற வேண்டும். அதுமட்டுமல்லாமல், இனி `பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லாதவர்களைக் கட்டையால் அடியுங்கள்” என்றார்.

பா.ஜ.க நிர்வாகியின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.