• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு

ByA.Tamilselvan

Aug 19, 2022

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு ரஷிய அதிபர் புதின் உத்தரவால் உலக அளவில் பரபரப்பு
நம் நாட்டில் மக்கள் தொகை 140கோடியாக அதிகரித்து வருகிறது. பொருளாதார சிக்கல்கள் காரணமாக
2 அல்லது 1 குழந்தைகள் போதும் என்ற நிலை தற்போது இருக்கிறது இந்நிலையில் ரஷ்யாவில் அதிகம் குழந்தைகளை பெற்றால் பரிசு ,பட்டமும் வழங்கப்படும் என அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷிய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் அதிபர் புதினை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அங்கு 10 குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளையோ பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களுக்கு அன்னை நாயகி என்ற சோவியத் கால பட்டம் வழங்கப்படும், அத்துடன் 10-வது பிறந்த குழந்தைக்கு 1 வயது ஆனவுடன் 1 மில்லியன் ரூபிள் (சுமார் ரூ.13 லட்சம்) ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அதிபர் புதின் அறிவித்துள்ளார். இதற்கான உத்தரவில் புதின் கையெழுத்து போட்டிருக்கிறார்.