தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப் பட்டுள்ளார்கள் மாற்றங்கள் குறித்து விபரம்…
தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் மின் உற்பத்தி கழக நிர்வாக இயக்குனர் மற்றும் சேர்மனாக இருந்த லகானி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நந்தகுமார் புதிய சேர்மன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்த சத்தியபிரதா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக கால்நடை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி துறை கூடுதல் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக மின்சாரத்துறை தலைவராக இருந்த ராஜேஷ் லகானி வருவாய் நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையராக சுந்தரவல்லி கல்வித்துறை ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுத்துறை இணை செயலாளர் விஷ்ணு சந்திரன் வேலைவாய்ப்பு துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக நலத்துறை ஆணையாளர் அமுதவல்லி ஜவுளித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் லில்லி சமூக நலத்துறை ஆணையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் லலிதா ஜவுளித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் பொதுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கைத்தறி துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தமிழக சிறு தொழில் வளர்ச்சி கழகம் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சிறு தொழில் வளர்ச்சிக் கழக தலைவர் சொர்ண ருசா திட்ட மாநில இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிதித்துறை இணை செயலாளர் பிரதீப் ராஜ் சென்னை மாநகராட்சி துணை ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கலால் துறை ஆணையராக முன் பதவி வகித்து வந்த ஜெகநாதன் தமிழக நீர் நிலை மேம்பாட்டு திட்ட நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடை மாற்றம்
