• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

வேடசந்தூர் தொகுதியை வளமிக்க தொகுதியாக மாற்றுவேன் -வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் குஜிலியம்பாறை, லந்தகோட்டை, கருங்கல் ஆகிய ஊராட்சிகளில் கொளுத்தும் வெயிலில் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டு தங்களின் ஆதரவை இரட்டை இலை சின்னத்திற்கு வழங்குவதாக கூறி உற்சாகமாக வரவற்றனர்.

அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பொதுமக்கள் முன்னிலையில் வாக்கு சேகரித்து பேசியபோது கூறியதாவது: திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை கூறி கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்தியது. அதில் பொது மக்களுக்கு எந்த வித நன்மையும் நடைபெறவில்லை பொய்யான தேர்தல் வாக்குறுதியை கூறி ஆட்சிக்கு வந்து அப்பாவி ஏழை எளிய மக்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டது.

மீண்டும் எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொடுத்து வளமுள்ள பசுமையான தொகுதியாக வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியை மாற்றுவேன். என்று உறுதி கூறுகிறேன். எனவே எனக்கு அனைத்து தரப்பு மக்களும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உடன் குஜிலியம்பாறை மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பாளையம் எம்.பெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சேட்டை கார்த்திக் மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.