• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க.வை நானே முன்னின்று காப்பேன் – எடப்பாடி பழனிச்சாமி..!

Byவிஷா

Jun 21, 2022

ராணுவ பலம் வாய்ந்த அ.இ.அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. கட்சி வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. நானே முன்னின்று காத்து நிற்பேன் என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உடன் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தைக் கொண்டு கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதையெல்லாம் முறியடித்து உங்களின் துணைக்கொண்டு அதிமுகவை பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும். பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. நானே முன்னின்று காத்து நிற்பேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.