

நடிகர் விஜயகாந்திற்கு கடந்த சிலஆண்டுகளாகவே உடல் நிலை மோசமடைந்து காணப்டுகிறது. அமெக்காவில் சென்று சிகிச்சை பெற்று வந்தார் .பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த கவனித்துக்கொள்கிறார்.அவ்வப்போது விஜயகாந்திற்கு மருத்துவபரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு 3 கால் விரல்கள் அகற்றப்பட்டுவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் ரத்தஓட்டம் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சை மூலம் 3 கால்விரல்கள் அகற்றப்பட்டுள்ளன.யாருக்கும் அஞ்சாத சிங்கமாக வலம் வந்த அவருக்கா இப்படியொரு நிலை என அவரது ரசிகர்கள் கண்ணீர் விடும்நிலை. அவர் நலமுடன் வீடு திரும்பவேண்டும் என பிரார்த்தனை செய்கின்றனர்.
