இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ள சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6 ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளனர். மே 6 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள இயக்குனர் செல்வராகவன் படத்தில் நடித்தது பற்றி தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் முக்கியமாக “சாணிக்காயிதம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக நான் நடிப்பு என்பது மிகவும் சலிப்பான விஷயம் என தவறாக நினைத்திருந்தேன்” எனக் கூறியுள்ளார்.