• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வேட்பு மனு தாக்கல் செய்த ஐ.பெரியசாமி அர.சக்கரபாணி..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக மாநிலத் துணைப் பொதுச் செயலரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் வேட்பாளருமான அமைச்சர் இ.பெரியசாமி ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஹேன்றி பீட்டரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. காளியப்பன், நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, திமுக ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தர்மராஜ், பாலு, ஒன்றிய துணைச் செயலாளர் தங்கச்சியம்மாபட்டி முருகானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் ஒட்டன்சத்திரம் முருகேசன், தொப்பம்பட்டி கனகு, மாவட்ட குழு உறுப்பினர் சிவமணி, தேமுதிக மாவட்ட செயலாளர் சிவக்குமார், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ரகுமான்சேட், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளைஞர் அணி மாவட்ட தலைவர் இடையகோட்டை வடிவேல் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் காந்தி காந்திராஜன் எம்.எல்.ஏ., திமுக ஒன்றிய செயலாளர்கள் கவிதா பார்த்திபன், சீனிவாசன், சுப்பையன், நகர செயலாளர் கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான ஒரு பங்கேற்றனர்.

பழநி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பாண்டி வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.