• Sat. Apr 27th, 2024

மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை – சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி…,

ByKalamegam Viswanathan

Oct 6, 2023

மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை கேட்டால் நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள் ஆனால் எழுதாத பேனாவிற்கு 84 கோடி ஒதுக்கிகிறார்கள் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி…,

வருகிற ஒன்பதாம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் மக்கள் உரிமைக்காக எடப்பாடியார் குரல் எழுப்புவார்.

520 வாக்குறுதியை கொடுத்தீர்கள் அது கிடப்பில் போட்ட கல்லாக உள்ளது எதிர்த்து கேட்டால் கைது செய்கிறீர்கள் எட்டுக்கோடி தமிழர்களும் உரிமைக்காக மு க ஸ்டாலினை எதிர்த்து போராடுகின்ற போது அனைவரையும் சிறையில் அடைக்க முடியுமா?

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கூட்டம் கூடக்கோயில், மேலஉப்பிலிகுண்டு ,கல்லணை ,கொக்குளம், வேப்பங்குளம், மருதங்குடி குராயூர் ஆகிய பகுதியில் நடைபெற்றது.இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வேப்பங்குளம் கண்ணன் தலைமை தாங்கினார். இந்த முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
முன்னதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் பெயரில் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஏ கே பி சிவசுப்பிரமணியன் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மாவட்ட அவைத் தலைவர் முருகன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் துரைப்பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கள்ளிக்குடி கிழக்கு ஒன்றியத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் வேப்பங்குளம் கண்ணனை அறிமுகப்படுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் சிறப்புரையாற்றியதாவது,

புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் மக்களுக்கான திட்டங்களை வழங்கினார்கள்.அதில் எதுவும் பாரபட்சம் பார்க்கவில்லை. ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் பாரபட்சம் பார்த்து வருகிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சும், தற்போது ஆளுங்கட்சியாக வந்த பிறகும் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்கவோம் என்று கூறிவிட்டு, தற்போது அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை காரணம் கேட்டால், நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். ஆனால் எழுதாத பேனாவிற்கு 84 கோடி ஒதுக்கிறார்கள். தனது தந்தையார் பெயரில் நூலகம் கட்ட பல நூறு கோடியை ஒதுக்கிறார்.

உங்க அப்பா பேர் நிலைக்க வேண்டும் என்பதற்காக நாடு தோறும் சிலை திறக்கிறீர்கள் நினைவிலும் கட்டுகிறீர்கள் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு ஒருவருக்கு கொடுத்து விட்டு மற்றவருக்கு கொடுக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம் எடப்பாடியார் மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

வருகின்ற 9ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது .நிச்சயம் மக்களின் உரிமைக்காக சட்டமன்றத்தில் எடப்பாடியார் குரல் எழுப்புவார் என பேசினார்.

520 வாக்குறுதியை கொடுத்தீர்கள் அது கிடப்பில் போட்ட கல்லாக உள்ளது ஆசிரியர்கள் போராட்டம் டெல்டா விவசாயிகள் போராட்டம் மாணவர்கள் போராட்டம் குடிதண்ணீர் இல்லை என போராட்டம் எங்கு பார்த்தாலும் போராட்டக் களமாக உள்ளது எதிர்த்து கேட்டால் கைது செய்கின்றனர் ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைகின்றனர் எட்டு கோடி தமிழர்களும் உரிமைக்காக மு க ஸ்டாலினை எதிர்த்து போராடுகின்ற போது அனைவரையும் சிறையில் அடைக்க முடியுமா?உரிமைக்காக போராடுகிற மக்களிடத்தில் உரிமைகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் தவிர சர்வாதிகாரப் போக்கை கையாள்வது என்பது கொடுமையின் கொடுமையாக உள்ளது.

கூடக்கோவிலில் ஆரம்ப சுகாதார நிலையம் மராமத்து செய்வதற்காக மனம் வரவில்லை பலமுறை கோரிக்கை வைத்தும் கூட பராமரித்து செய்வதில் முன் வரவில்லை அம்மா கொடுத்த திட்டங்களான தாலிக்கு தங்கம் நிறுத்திவிட்டார்கள் அம்மா கிளினிக் 2200 பூட்டி விட்டார்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்று தந்தவர் எடப்பாடியார் அவர்கள் கறவை மாடு ஆடு மடிக்கணினி கொடுக்கவில்லை இப்படிப்பட்ட கொடுமை இந்த நாடு சந்தித்தது இல்லை வேதனையின் உச்சத்தில் தமிழக மக்கள் இருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் கொடுத்த முதியோர் உதவித்தொகை அரசியல் கால் புணர்ச்சியோடு தற்போது 30 சதவீதம் ரத்து செய்துள்ளார்கள். ஐந்து லட்சம் முதியோர் உதவித்தொகை எடப்பாடியார் கொடுத்தார்கள் ஆனால் தற்போது திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை முதியோர் உதவித்தொகை சீரழிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *