• Fri. May 10th, 2024

“தூய்மை திரு நகர்” விழிப்புணர்வு பேரணி.., மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்…

ByKalamegam Viswanathan

Oct 6, 2023

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் அண்ணா பூங்காவில் “தூய்மை திரு நகர்” விழிப்புணர்வு பேரணி மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்.
பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நெகிழி ஒழிப்பின் பயன்பாட்டை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

மதுரை திருநகரில் சுற்றுப்புறங்களில் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக மதுரை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் நெய் பயன்படுத்தி தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தூய்மை திருநகர் என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார். மதுரை மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 தலைவர் உதவி ஆணையாளர் சுரேஷ் 94-வது மாமன்ற உறுப்பினர் சுவேதா சத்யன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக (பிளாஸ்டிக்) நெகிழி பொருட்களை உபயோகப்படுத்துவது தவிர்க்கவும் குப்பை கழிவுகளை கண்ட இடங்களில் போடாமல் தூய்மையாக குப்பை சேகரிக்கும் இடங்களில் கொட்டவும்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மூலம் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி திருநகர் அண்ணா பூங்காவில் துவங்கி நான்காவது பேருந்து நிறுத்தம், மூன்றாவது, இரண்டாவது, ஒன்றாவது நிறுத்தம் வழியாக மீண்டும் அண்ணா பூங்கா வந்தடைந்தது.

நிகழ்ச்சிக்கு பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை திருநகர் மாமன்ற உறுப்பினர் சுவேதா சத்யன் செய்திருந்தார் மதுரை பக்கம் விஷ்வா சரவணபவன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமூக நல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *