• Wed. Mar 29th, 2023

நானே ராஜா நானே மந்திரி . . . தேனியில் தனிராஜாங்கம் நடத்தும் அதிகாரிகள்

அரசு என்பது மக்களுக்கானது என்று கூறி தான் அரசியல் வாதிகள் வாக்கு கேட்க்கின்றனர்.அந்த அரசு மக்களுக்காக தான் செயல்படுகிறாத அதிகாரிகள் முறையாக செயல்படுகின்றனரா என்று பார்க்க எந்த அரசியல்வாதியும் விரும்புவதில்லை ,உயர் அதிகாரிகளும் விரும்புவது இல்லை.

தாங்கள் கண்காணிக்கபடுவதில்லை என்ற ஒரு மெத்தன போக்கில் அதிகாரிகள் ஆடும் ஆட்டம் மிகவும் கொடுமையானது. இவர்களது ஆட்டத்திற்கு பலிகிடா அப்பாவி மக்கள். அப்படி அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை வேண்டியவர் ,வேண்டாதவர் ,சாதி பார்த்து சமூகம் பார்த்து , பணத்திற்கு விலை பேசி வியாபாரம் செய்து வருகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தான் தேனியில் நடந்துள்ளது.தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் ரத்னாதேவி.இவரது கணவர் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் தூய்மைப்பணியாளராக பணி புரிந்து வந்தார். 2019 ம் ஆண்டு ரத்னாதேவி கணவர் இறந்து விடுகிறார்.

குடும்ப வறுமைகாரணமாக கருணை அடிப்படையில் தனது கல்வித்தகுதிக்கேற்ப வேலை தருமாறு பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை வைக்கிறார்.

ஆனால் அவரோ தற்போது தூய்மை பணியாளர் வேலையை தவிர வேற எந்த வேலையும் இங்கு இல்லை என்று கூறுகிறார்.மேலும் இது குறித்து தேனி மண்டல் பேரூராட்சி உதவி இயக்குனருக்கு பரிந்துரை செய்தும் ரத்னாதேவியை அனுப்புகிறார்.

இதனை அறிந்த ரத்னாதேவி உரிய காலிப்பணியிடங்கள் இருந்தும் தான் குறவன் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அலைக்கழிக்கப்படுவதாக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திடம் புகார் ஒன்றை அளிக்கிறார்.

அந்த புகாரில் பேரூராட்சிகளின் இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் கடிதத்தின் படி கருணை அடிப்படையில் தூய்மை பணியாளர் பதவியிலிருந்து பதிவறைஎழுத்தர் பதவிக்கு பதவி உயர்வு வழங்க கூடாது.ஆனால் அதற்கு மாறாக லஞ்சம் பெற்றுக்கொண்டு தற்காலிக பதிவறை எழுத்தராக வடுகபட்டியில் பேரூராட்சியில் காளியப்பன், ஓடைப்பட்டி பேரூராட்சியில் மாரிச்சாமி ஹைவேவிஸ் பேரூராட்சியில் கணேசன் ஆகியோர் முறைகேடாக பணி உயர்வு பெற்று பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இது முறைகேடான செயலை ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தேனி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காலம் தாழ்த்தி வருகிறார்.இன்னும் கூடுதலாக கூற வேண்டுமென்றால் உடந்தையாக அவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார் என்பது கண்கூடாக தெரிகிறது.

தமிழக அரசாணையை காட்டி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று முறையிட்ட போது , பழைய அரசாணையை காட்டி தூய்மை பணியாளர் பணி மட்டும் தான் வழங்க முடியும் என்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சாதிய வன்மத்துடன் கூறியுள்ளார்.

இந்த புகாரை விசாரித்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் பத்து ஆண்டுகளாக இப்படி ஒரு முறைகேடு நடந்தது குறித்து பேரூராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு தெளிவுரை கேட்கப்பட்டுள்ளது.மேலும் உரிய கல்வித்துதி இருந்து இரண்டு ஆண்டுகளாக வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கதக்கது.2007-2008 முதல் 2013-2014 வரையிலான தணிக்கைத்துறை தடைகளில் முறையற்ற பதிவறை எழுத்தர் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை இதுநாள் வரை சரி செய்யாமல் இருப்பது பேரூராட்சிசெயல் அலுவலரின் கடமையாற்ற மெத்தனபோக்கை காட்டுகிறது.மேலும் தணிக்கைத்துறை தடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏதோ உள்நோக்கத்துடன் பதவி உயர்வு கொடுத்து பணி நியமனம் வழங்கப்பட்டவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் பழனிசெட்டிபட்டி செயல அலுவலர் செயல்படுகின்றனர் என்று தெள்ள தெளிவாக தெரிகிறது.


மேலும் உடனடியாக அந்த ரத்னா தேவிக்கு கல்வித்தகுதிகேற்ப பணி வழங்க வேண்டும் என்று பழனிசெட்டிபட்டி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டும் இது நாள் வரை அவருக்கு எந்த வித பணியும் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

இந்த உத்தரவு குறித்து ஒவ்வொரு அதிகாரிகளிடம் ஒவ்வொரு விதமாக பயணிக்கிறது.உத்தரவு எங்களுக்கு வரவில்லை, மேலிடம் கூறட்டும் மேலிடம் கூறட்டும் என்று ஒரு பெண்ணுக்கு வேலை கொடுக்க அரசு அதிகாரிகள் மாபியா கும்பல் போல ஒருவரை ஒருவர் காட்டிகொடுக்காமல் லஞ்சத்தை பங்கு போட்டுகொண்டு ராஜாங்கம் நடத்துகின்றனர்.இது போன்ற அதிகாரிகளை களை எடுக்க அரசு முன்வருமா ?பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக அரசு நீதி அளிக்குமா என்பதை பொருத்திருந் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *