• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய்.ஜெ.சரவணன் குமார் பரபரப்பு பேட்டி..,

ByM.I.MOHAMMED FAROOK

Jul 9, 2026

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தந்த புதுச்சேரி திருபுவனை தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சாய்.ஜே.சரவணன் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைந்து அறிவிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யாதது குறித்து கேள்விக்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் சாய் ஜெ சரவணன் குமார் அரசியல் அமைப்பு சட்டப்படி முதலமைச்சரே அனைத்து துறைகளையும் வைத்துக் கொள்ளலாம் எனவும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வது அவசியம் இல்லை எனவும் கருத்து தெரிவித்தார். சபாநாயகர் தேர்தல் நடைபெறாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய்.ஜே. சரவணன் குமார் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் தேர்தல் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டால் நாங்களும் சேர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைதேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்த சாய்.ஜே.சரவணகுமார், கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டும் காங்கிரஸின் செயல் குறித்த கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.