• Thu. Apr 25th, 2024

எய்ம்ஸ் மருத்துவமனை காலம் கடந்தாவது வந்தால் மகிழ்ச்சி

ByKalamegam Viswanathan

Apr 5, 2023

மதுரையில் எய்ம்ஸ் காலம் கடந்து வந்தாலும் மகிழ்ச்சி தான்..விமானநிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
ராமநாதபுரத்தில் படித்தாலாவது எய்ம்ஸ் என்கிற ஒன்றை தமிழ்நாட்டில் உறுதிப்படுத்துவார்கள் என்கிற நினைப்பில் தான் தமிழக முதல்வர் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை அனுமதிக்க செய்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்- மா.சுப்ரமணியம் மதுரை விமான நிலையத்தில் பேட்டி
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது:

பரவி வரும் கொரோனா காரணமாக விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடு கொடுத்த கேள்விக்கு:
விமான நிலையத்தை பொருத்தவரை ஒன்றிய அரசு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இரண்டு சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய சொல்லி உள்ளனர். தற்போது வரை இந்த நடைமுறைதான் தொடர்ந்து வருகிறது.
புதிதாக எதுவும் அறிவுறுத்தப்பட்டால் அதை பின்பற்றுவோம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கூட மதுரை, சென்னை, கோவை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமானங்களில் வெளிநாடுகளில் பயணிகளுக்கு சோதனை மேற்கொண்டதில் இரண்டு நாட்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
உலகம் முழுவதுமே xbb என்கிற வைரஸ் கூடுதலாக பரவி வருகிறதால் வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கான ரேண்டம் பரிசோதனை மேற்கொண்டதில் 8 முதல் 10 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

உருமாறி உள்ளதா என்ற கேள்விக்கு:
பெரிய அளவிலான பாதிப்பு இல்லை இணை நோய் உள்ளவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இந்த கொரோனா பாதிப்பு தீவிர சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அளவிற்கு, ஆக்சிஜன் வைக்க வேண்டும் அளவிற்கு இல்லை.
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கட்டுப்பாடுகள் உள்ளதா? என்ற கேள்விக்கு:
இதுவரை தமிழ்நாட்ட அளவில் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் நோயாளிகள் பார்வையாளர்கள் ஒன்றாம் தேதியிலிருந்து முகக் கவசம் அணிய வேண்டும் நான் அறிவுறுத்தி, அதை உறுதிப்படுத்தி உள்ளோம்.

வெயில் காலங்களில் பரவுமா என்ற கேள்விக்கு:
கடந்த இரண்டு வருடமாக வருகிறதால், இது உறுதிப்படுத்த முடியாத செய்தி.

ராமநாதபுரத்தில் படிக்கும் மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் நிலை குறித்த கேள்விக்கு:
ராமநாதபுரத்தில் படித்தாலாவது எய்ம்ஸ் என்கிற ஒன்றை தமிழ்நாட்டில் உறுதிப்படுத்துவார்கள் என்கிற நினைப்பில் தான் தமிழக முதல்வர் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அந்த மாணவர்களை அனுமதிக்க செய்தார். காலம் கடந்தாவது வந்தால் மகிழ்ச்சி என கூறினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *