தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வந்தவர் நடிகர் சந்தானம். தனக்கென ஒரு ட்ரெண்டை செட் பண்ணிக்கொண்டு சினிமாவில் கலக்கி வந்தவர். தற்போது கதாநாயகனாக களம் இறங்கி நித்து வருகிறார்.
இவர் ஹீரோவாக நடித்து வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், A1, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.ஆனால் சில படங்கள் இவருக்கு கைக்கொடுக்கவில்லை. இதனையடுத்து, அவரது ரசிகர்கள் நல்ல காமெடி படத்தை சந்தானத்திடம் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதற்கிடையில், நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கேப்டன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சந்தானம் மீண்டும் தான் காமெடியனாக நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ” நான் காமெடியனாகத்தான் இந்த சினிமாவிற்குள் வந்தேன். இப்போதுகூட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் 2ஆம் பாகம் எடுத்தால், ஆர்யாவுக்கு காமெடியனாக நடிக்க நான் தயார். எனவே, நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறவில்லை” என தெரிவித்துள்ளார் சந்தானம்.