• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

தன் ட்விட்டர் கணக்கை டெலிட் செய்த இயக்குநர் வெற்றிமாறன்..!!

Byகாயத்ரி

Aug 25, 2022

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது டுவிட்டர் கணக்கை திடீரென டெலிட் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் பல வெற்றி படங்களை எடுத்து விருதுகளை குவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் சூரி நடிப்பில் உருவாகிவரும் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் திடீரென தனது டுவிட்டர் கணக்கை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. விடுதலை, வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் கவனச்சிதறலை தடுக்க அவர் தனது டுவிட்டர் கணக்கை டெலிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.