• Fri. Apr 26th, 2024

உக்ரைனில் மீண்டும் ஹைபா்சானிக் ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியப் படைகள் மீண்டு அதிநவீன ஹைபா்சானிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியதில் இருந்து, உன்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், ஐ.நா முயற்சிகள் மேற்கொண்டபோதும் அவை தோல்விலேயே முடிந்தன.

உக்ரைன் மீது 26-ஆவது நாளாக தாக்குதலை நடத்தி வரும் ரஷியப் படைகள், தலைநகா் கீவை கைப்பற்ற முடியாத நிலையில், மற்ற நகரங்கள் மீது ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
அஸோவ் கடல் துறைமுக நகரமான மரியுபோல் கடந்த மூன்று வாரங்களாக ரஷிய படையினரின் முற்றுகையில் உள்ளது. இதுவரை ரஷிய தாக்குதலில் அந்த நகரைச் சோந்த 2,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், உணவு, குடிநீா், எரிபொருள் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதனிடையே ரஷியப் படைகளின் தீவிர தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனிய ராணுவ சொத்துக்களை குறிவைத்து க்ரூஸ் மற்றும் அதிநவீன ‘கின்ஜால்’ ஹைபா்சானிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது ரஷியப் படைகள்.

காஸ்பியன் கடல்களில் உள்ள கப்பல்களில் இருந்து கப்பல் ஏவுகணைகள் மற்றும் கிரிமியா வான்வெளியில் இருந்து ‘கின்ஜால்’ ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கூறுகையில், கருங்கடல் துறைமுகமான மைகோலைவுக்கு அருகில் உள்ள கொஸ்ட்யன்நிவ்காவில் உள்ள உக்ரைனிய எரிபொருள் கிடங்கில் ‘கின்ஜால்’ ஹைபர்சானிக் ஏவுகணை மோதியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் “கலிப்ர் கப்பல் ஏவுகணைகள் கருங்கடலின் நீரிலிருந்து நிஜின் ஆலைக்கு எதிராக ஏவப்பட்டன, இதில், சேதமடைந்த ராணுவ பாதுகாப்பு வாகனங்களை சரி செய்து வருகிறது உக்ரைன்.”

இந்நிலையில், இன்றும் 2,000 கி.மீ (1,250 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளை ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் தாக்கும் திறன் கொண்ட ‘கின்ஜால்’ ஹைபர்சானிக் ஏவுகணைகளை கொண்டு ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் மைஹொலெவ் மாகாணம் கொஸ்ட்யன்நிவ்கா என்ற பகுதியில் குடியிருப்பு பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள உக்ரைன் ராணுவ எரிபொருள் சேமிப்பு கிடங்கு, ராணுவ நிலைகளைக் குறிவைத்து அதிநவீன ‘கின்ஜால்’ ஹைபர்சானிக் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைனிய சிறப்புப் படைகள் அமைந்துள்ள வடக்கு சைட்டோமிர் பகுதியில் உள்ள ஓவ்ரூச்சில் வான்வழி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேற்கு உக்ரைனில் உள்ள கார்பாத்தியன் மலைகளில் டிலியாட்டினில் உள்ள வெடிமருந்துக் கிடங்கை அழிக்கும் போரில் முதன்முறையாக ஹைபா்சானிக் ஏவுகணை ரஷியப் படைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறியது.

2016 இல் சிரியாவில் தனது ராணுவ பிரசாரத்தின் போது ‘கின்ஜால்’ ஹைபர்சானிக் ஏவுகணையை முதன்முதலில் பயன்படுத்தியது ரஷியா.
இடை மறிக்கும் ஏவுகணையையும் தாண்டிச் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய ஹைபர்சானிக் ஏவுகணையின் வேகம் மற்றும் வான்-பாதுகாப்பு அமைப்புகளைக் கடக்கும் திறனைக் கருத்தில் கொண்டு புதின் அதை “ஒரு சிறந்த ஆயுதம்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *