• Fri. Mar 29th, 2024

கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்- மனைவி தீக்குளிக்க முயற்சி

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவிடு செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவன் மனைவி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கோபாலபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் அவரது மனைவி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர். மறைத்து வைத்திருந்த மண்ணனை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி சமாதானம் செய்தனர். அப்போது முருகேசன் காவல்துறையின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். வலுக்கட்டாயமாக காவல்துறையினர் இழுத்து ஆட்டோவில் ஏற்றி சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்..


இது குறித்து பாதிக்கப்பட்ட முருகேசன் கூறும் போது எனது கோபாலபுரம் பகுதியில் ஒரு ஏக்கர் பாதிக்கப்பட்ட பட்டா நிலம் உள்ளது இந்த நிலத்திற்காக அளவீடு செய்து வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
நிலத்தை அளவிடு செய்ய பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவித்தும் நிலஅளவீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர் .இந்த நிலையில் வட்டாட்சியர் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என்றால் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வேண்டும் எனவும் இல்லையென்றால் அளவீடு செய்து தர முடியாது எனவும் இது குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் போய் புகார் தெரிவித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்தனர் .
வட்டாட்சியருக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுக்க என்னிடம் வசதி இல்லை என்றும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் வேறு வழியின்றி நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தோம் எனவும் தெரிவித்தனர்
ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை அளவிடு செய்து வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்
லஞ்சம் கேட்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவன் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *