• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் ச.கருப்பையா முதல்வருக்கு கோரிக்கை மனு..,

தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் மாநிலத்தலைவர் ச.கருப்பையா தமிழக முதல்வருக்கு அனுபியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.- தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்கள் நில சுவான்தார்களின் நிலத்தில் கொத்தடிமைகளாக விவசாயகூலிவேலை செய்து அடிமைகளாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போதைய ஆட்சித்லைவராக இருந்த கிருத்துவ மிஸ்சனரியான திரமென்சீர் பணியாற்றியபோது பட்டியல் இன மக்களின் அடிமை நிலையினை குறித்து ஆய்வு செய்து லண்டன் பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்த அறிக்கையில் பட்டியல் இன மக்களுக்கு நிலம் வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளார். இதனடிப்படையில் சென்னை மகாணஅரசாணை எண்.1010ன்படி சுமார் 12லட்சம் ஏக்கர் பஞ்சமிநிலங்கள் நிபந்தனையின் அடிப்படையில் 1892 முதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகஅரசால் பட்டியல் இன மற்றும் பழங்குடிமக்களுக்கு அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் ஆதிதிராவிடமக்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நிலங்கள் முழுவதும் தற்போது தமிழகம் முழுவதும் பட்டியல் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தான் எதார்த்தம். அம்பேத்கார் சிந்தனையாளர்கள் உள்ளிட்டபல்வேறு சனநாயகசக்திகள் சார்பாக பஞ்சமிநிலமீட்பு போராட்டங்கள் மூலம் தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது. அந்த மீட்கப்பட்ட நிலங்கள் வருவாய்துறை திட்டமிட்டே தரிசு நிலங்கள் என்று வகை மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் பட்டியல் அல்லாத பிற சாதியை சேர்ந்த நில ஆக்கிரமிப்பாளர்களுக்கே நிலங்களை வழங்க மறைமுகமாக முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் 2024ல் கள்ளக்குறிச்சி மாவட்டவருவாய் அலுவலர் வருவாய்துறை ஆவணங்களில் அரசு தரிசு என குறிப்பிடாமல் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் என்று திருத்தம் செய்திடவேண்டும் என்ற ஒரு சுற்றறிக்கையும் பிறபித்துள்ளார்.

ஆனாலும் குறிப்பாக மதுரை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தர்மரி, சேலம் போன்ற அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்துறை திட்டமிட்டு பஞ்சமிநிலம் மற்றும் ஆதிதிராவிடமக்களிடமுள்ள நிலங்களில் தனிநபர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டாலும் மீண்டும் அரசுதரிசு என்று வருவாய்துறை ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே தாங்கள் நேரடியாக தலையிட்டு தமிழகம் முழுவதும் பட்டியல் இனமக்களுக்கு மீட்கப்பட்டநிலங்களை அரசுதரிசு என்று குறிப்பிடாமல் ஆதிதிராவிடமக்களுக்கு ஒதுக்கப்பட்டநிலம் என திருத்தம் செய்திட அரசாணை பிறப்பிட உரிய வழிவகை செய்திடவேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.