• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை..,

Byமுகமதி

May 23, 2026

இன்று தமிழ்நாடு முழுவதும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அரசரின் 1351 ஆவது சதய விழா முத்தரையர் இன மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சியில் அந்த மாமன்னனுக்கென்று ஒரு சிலையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏற்பாட்டில் நிறுவினார்.

அதன் பிறகு அப்போது ஆட்சியில் இருந்த அமைச்சர்களில் முத்தரையர் இனத்தை சேர்ந்த அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது அனைவரும் அங்கு சென்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அதிமுக ஆட்சியிலும் சரி அதனை தொடர்ந்து வந்த திமுக ஆட்சியிலும் சரி தொடர்ந்து குறிப்பிட்ட அந்த முத்தரையர் இனத்தை தாண்டி பல்வேறு தரப்பிலும் உள்ளவர்கள் அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதை பெருமையாக ஏற்றுக் கொண்டனர். அந்த வகையில் ஆண்டுதோறும் மே 23ஆம் தேதி முத்தரையர் சதய விழாவாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதிகள் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் இருந்து இங்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செய்து செல்கிறார்கள்.

அதேபோல் திருச்சிக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்று புதுக்கோட்டையில் வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனரான கருப்பையா முத்தரையர் இன்று காலையில் திருச்சி செல்வதற்கு முன்பாக புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரில் முத்தரையர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதோடு பேட்டியும் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்…
இந்த நேரத்தில் தேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அரசியல் பேச வேண்டிய சூழ்நிலையும் இருக்கிறது. இன்றைய இன்றைய தமிழக அரசு, தமிழக வெற்றிக்கழக அரசு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பயன்படுத்திய வாகைப் பூவை கொடியின் நடுவில் சின்னத்தில் பதித்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட தவெக அரசு இப்போது முத்தரையர் இன மக்களை மறந்து விட்டது.

முதலில் மாநாட்டில் சொல்லி இருந்தாரே தவிர தேர்தலுக்குப் பிறகு அந்த சமுதாயத்தை மறந்து விட்டார். எங்கள் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வாக்களிக்காமல் விஜய் வெற்றி பெற்றுவிடவில்லை. ஆனால் அமைச்சரவையில் உத்தரையர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. தமிழ்நாட்டை திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வந்தாலும் முத்தரையர் இன மக்களை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி அளித்து அவர்களை அமைச்சர்களாக ஆக்கி அழகு பார்த்து ஆட்சி நிர்வாகத்தை கையில் கொடுத்து கடந்த கால அரசுகள் வந்திருக்கின்றன. இது கிட்டத்தட்ட திமுக ஆட்சி காலம் முதலே இப்படித்தான் இருந்தது. ஆனால் இவ்வளவு காலம் கழித்து முத்தரையர் இன மக்களை ஓரம் கட்டி இருப்பது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

இப்போது கூட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறையில் வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் அவர்களுக்கு பொறுப்பு வழங்கி இருக்கிறார் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் வைத்த கோரிக்கை தான். அதன் பேரில் வழங்கி இருக்கிறார்கள் தவிர இந்த இன மக்களின் மீது உள்ள அக்கறையால் கிடையாது.
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை பொருத்தமற்றிலும் ஆறு மாதம் பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அண்ணன் மு.க. ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஆனால் நான் 60 நாட்களில் சொல்கிறேன் இந்த ஆட்சி நிலைக்குமா நிலைக்காதா என்று. அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.