திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் (சாம்பிள்) சேகரிப்பு
திருப்பரங்குன்றத்தில் இறந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை உண்ட மூன்று சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்.ஐஸ்கிரீம் விற்ற சிற்றுண்டி கடையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாடு அலுவலர் பால்சாமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர் பின் கடையில் இருந்த ஐஸ்கிரீம் மாதிரிகளை டப்பாகளில் சேகரித்து ஆய்வுக்காக கொண்டு சென்றார்.மேலும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவ மனையில் சிகிட்சை பெற்று வரும் மூன்று குழந்தைகளையும் பார்வையிட்டு நலமாக உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.