• Sat. Apr 20th, 2024

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டராக கணவன்-மனைவி ..

Byகாயத்ரி

Apr 6, 2022

ஆந்திரா மாநிலத்தில் இருந்த 13 மாவட்டங்கள் நேற்று முன்தினம் 2-ஆக பிரிக்கப்பட்டு புதியதாக 13 மாவட்டங்கள் உதயமாகி மொத்தம் 26 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது.

புதிதாக பிரிக்கப்பட்ட 2 மாவட்டங்களுக்கு கணவன்-மனைவி கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் மந்தஷா அடுத்த பிடி கிராமத்தை சேர்ந்தவர் டெல்லி ராவ் (வயது 40). சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த டெல்லி ராவ் கடந்த 2006-ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார். இவரது மனைவி பிரசாந்தி (36). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவரும் கடந்த 2008-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற கணவன்-மனைவி இருவரும் பல்வேறு இடங்களில் உதவி கலெக்டராக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட என்.டி.ஆர். மாவட்டத்திற்கு டெல்லிராவ் புதிய கலெக்டராகவும், பிரசாந்தி மேற்கு கோதாவரி மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கணவன்- மனைவி இருவரும் நேற்று முன்தினம் அந்தந்த மாவட்டங்களில் கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *