தமிழகத்தில் கடந்த 40 மாதங்களாக சொத்து வரி வீட்டு வரி பத்திரப்பதிவு கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போதைப்பொருள் கலாச்சாரம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த முடியாத நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் அரசைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அஇஅதிமுக சார்பில் நகரச் செயலாளர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர்கள் செல்வமணி,சேவியர் தாஸ், கருணாகரன். மாநில அம்மா பேரவை துணை செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பி வருகின்றனர்.