இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு பெற வேண்டும் என மதுரை ஆதீனம் பரபரப்பான கோரிக்கையை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் நேற்று முன்தினம் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,
மீனவர்களின் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு அவர்களை விடுதலை செய்துள்ளனர். இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாராட்டுகள். கச்சத்தீவை மீட்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து போராட வேண்டும். தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசிற்கு கண்டனங்களைத் தெரிவிப்பதோடு மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்ததற்கும் கண்டனங்கள். இலங்கையில் தற்போது அதிபராக பொறுப்பேற்றவர் மிகவும் நல்லவராக இருக்கிறார். மேலும் இந்த நல்ல நேரத்தில் இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு தனி நாடு பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை என்று கூறியுள்ளார்.