• Tue. Feb 18th, 2025

இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும்? – சு.வெங்கடேசன் எம்பி ட்வீட்!

நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், இளையராஜா அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, இளமை இதோ இதோ, இதோ என்ற பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், இளையராஜா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வீடியோவை பதிவிட்டு, ‘இசையெனும் வசீகரம்! இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும்?’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.