கருணாநிதி பேனா நினைவுச்சின்னத்திற்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம்.
கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த கடலுக்கு நடுவில் அமைய உள்ள கருணாநிதி பேனா நினைவுச்சின்னத்திற்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.