தேவையானவை:
ஹார்லிக்ஸ்-1கப், பால்பவுடர்-1கப், சர்க்கரை-1ஃ2கப், தண்ணீர்-2கப், பாதாம், பிஸ்தா, முந்திரி-தலா-6, ஏலக்காய் பொடி-1ஃ2ஸ்பூன்
செய்முறை:
பால்பவுடரை 1கப் நீரில் கட்டி இல்லாமல் கரைத்து வைத்து கொண்டு வாணலியில் ஊற்றி நன்கு காய்ந்ததும் சர்க்கரை சேர்க்கவும், பின் ஹார்லிக்ஸையும் பால்பவுடரை கரைத்தது போல் செய்து சூடான பால் கலவையுடன் இதனையும் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் வைத்து கொண்டு வர வேண்டும், பின் பருப்பு வகைகள், ஏலக்காய் சேர்க்கவும். பின் ஒரு தட்டில் நன்கு நெய் தடவி கெட்டியான கலவையை கொட்டி ஆறியதும் துண்டுகளாக்கி சாப்பிடவும், கலராக வேண்டும் என்றால் கேசரி பவுடர் பயன்படுத்தி கொள்ளலாம்.