• Wed. Dec 11th, 2024

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

Byமதி

Nov 3, 2021

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கி வருகிறது.
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் விடிய விடிய கனமழை தொடர்ந்துவருகிறது.

கனமழை காரணமாக தமிழகத்தில் 20 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, பெரம்பலூர், நாகை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும், ராணிபேட்டையில், பள்ளிகளுடன் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.