• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நெல்லை மறு உத்தரவு வரும்வரை சாஃப்டர் பள்ளிக்கு விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர்

Byமதி

Dec 18, 2021

நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். 4 மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்படடபோது, உடல்களை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.

முதலமைச்சர் அறிவித்த 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதற்காகத் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் அரசின் உயர் அலுவலர்கள் மருத்துவமனைக்குச் சென்றனர். அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவர்களின் உடலகள் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலமைச்சர் அறிவித்த 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை அமைச்சர் ராஜகண்ணப்பன் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கினார். பின்னர் அவர்கள் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். அதேபோல், படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் நான்கு மாணவர்களையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து முதலமைச்சர் அறிவித்த 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பள்ளியின் உறுதி தன்னைக்குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், மறு உத்திரவு வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று முதல் பள்ளிக்கு யாரும் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.