நெல்லையில் தரமற்ற பள்ளிக் கட்டடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை தரமற்ற பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வுசெய்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலுள்ள தரமற்ற கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.