

கரூர் மாவட்டம் மண்மங்களத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி இந்துஜா நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை செய்துள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100/100 எடுத்துள்ளார். டெக்ஸ்டைல் தொழிலாளியின் மகளான இவர் 498 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பொன்னாடை போர்த்தியும், இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.

