• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கள்ளக்காதலில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை..,

ByKalamegam Viswanathan

Sep 14, 2026

மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள ஐந்து வீடுதனியார் கல்லூரி அருகே இளைஞர் ஒருவர் நேற்று இரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிலைமான் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தான் வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு ஒருவர் சிகிச்சை எடுத்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்ற போலீசார் குற்றவாளிகளான வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் கப்பலூரைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் கொடைக்கானலை சேர்ந்த தெய்வேந்திரன் (28) என்பதும் இவர் சின்ன உடைப்பு பகுதியில் ராஜபாண்டியன் மனைவி பானுப்பிரியா என்பவரை சந்தித்து விட்டு பெரியார் நகர் வழியாக திரும்பி சென்று கொண்டிருக்கும் போது பின் தொடர்ந்து வந்த பானுப்பிரியாவின் கணவர் ராஜபாண்டியும் அவரது நண்பர் ராஜேஷும் தெய்வேந்திரனை அருவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தெய்வேந்திரன் ராஜபாண்டி மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது இதனை பலமுறை ராஜபாண்டி கண்டித்துள்ளார் .

இந்நிலையில் தேவேந்திரன் மேலூரில் உள்ள தனது நண்பருடன்ராஜபாண்டியன் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதனை தெரிந்து பின் தொடர்ந்து வந்த ராஜபாண்டி மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் பெரியார் நகர் பகுதி அருகே வரும் போது
அங்கு மது அருந்திக் கொண்டிருந்த தேவேந்திரன் மற்றும் அவரது நண்பருடன் தகராறு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜபாண்டி மற்றும் ராஜேஷ் ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவ இடத்தில் தேவேந்திரன் இந்நிலையில் தேவேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில் ராஜேஷுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து ராஜேஷ் வளையங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் குற்றவாளிகள் வலையங்குளம் ஆரம்ப சுகாதாரம் நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் போது போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். கள்ளத்தொடர்பினால் தான் கொலை நடந்ததா? அல்லது கொலைக்கு வேறும் ஏதும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து சிலைமான் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.